திருவாரூரில் பிரபல ரவுடி வெட்டி கொலை விவகாரம்; ஐந்து பேர் கைது

by Editor / 11-03-2023 09:08:57am
திருவாரூரில் பிரபல ரவுடி வெட்டி கொலை விவகாரம்; ஐந்து பேர் கைது

திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமார் நேற்று கமலாபுரம் என்கிற இடத்தில் 11 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் பாரதி, வீரபாண்டியன், சூர்யா, அரசு, மாதவன் உள்ளிட்ட 5 நபர்களை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் தலைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜ்குமார் முக்கிய குற்றவாளியாக இருந்த நிலையில் அவருடைய கொலைக்கு பழி வாங்கும் விதமாக நடேச தமிழார்வனனின் மகன் ஸ்டாலின் பாரதி தலைமையில் இந்த கொலை நடைபெற்று இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் 3 ஆய்வாளர்கள் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் தகவல்.

 

Tags :

Share via

More stories

Logo