திமுகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்ய மகேந்திரன்

by Editor / 07-07-2021 02:16:41pm
திமுகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்ய மகேந்திரன்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன், தேர்தல் தோல்விக்கு கமல்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து மகேந்திரன் திமுகவில் இணையவுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை நடைபெறும் நிக்லஸில் அவர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo