வீட்டில் குவியலாக மீட்கப்பட்ட பாம்புகள்..
தெலுங்கானா மாநிலம், சிரிசில்லா மாவட்டம், வெமுலவாடாவில் உள்ள ஒரு வீட்டில், குவியல் குவியலாக பாம்பு குட்டிகள் வெளிவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வடிகால் வாய்க்காலில் இருந்து பாம்பு குட்டி வெளியே வந்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாம்பு பிடிப்பவரை அழைத்தனர். வாய்க்காலில் இருந்த கல்லை அகற்றியபோது பாம்புகள் குவியல் குவியலாக வெளியே வந்தன. இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 25 பாம்பு குட்டிகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
Tags :