லாரிகளில்  புகையிலை பொருட்களை  விற்பனை செய்ய கொண்டு வந்த 4 நபர்கள் கைது. 

by Editor / 30-04-2023 11:12:38pm
லாரிகளில்  புகையிலை பொருட்களை  விற்பனை செய்ய கொண்டு வந்த 4 நபர்கள் கைது. 

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உதவி ஆய்வாளர் சிவா  தலைமையிலான காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  ஜோதிபுரம் விலக்கு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வி.கே.புரம், காமராஜர் தெருவை சேர்ந்த தியாகராஜ்(29), அம்பாசமுத்திரம், அயன் திருவாழிஸ்வரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி(30), அம்பாசமுத்திரம், அண்ணா நகரை சேர்ந்த டேனிஷ்எடிசன்(24), சூரியமாதவன் (23) மற்றும் ஒருவர் ஆகியோர் சேர்ந்து வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை சில்லறையாக விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் நான்கு பேரையும் முன்னேற்பள்ளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர்  தில்லைநாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 4 நபர்களையும் 29.04.2023 அன்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 529 கிலோ புகையிலை பொருட்களையும், 2 லாரிகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo