சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 47 ஆண்டுகள் சிறை

by Staff / 18-05-2023 11:21:54am
சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 47 ஆண்டுகள் சிறை

கேரளாவின் மலப்புரம் அருகே நீலம்பூரில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.1,05,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மம்பாட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (42) என்பருக்கு நீலம்பூர் விரைவு சிறப்பு கோட்ட நீதிபதி கே.பி. ஜாய் தண்டனை விதித்தார். இச்சம்பவம் 2016, 2017ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளது. திரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் கே.எம். பிஜூ நிலம்பூர் இன்ஸ்பெக்டராக இருந்தபோது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். குற்றவாளி தற்போது, தவனூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories