பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம்.

by Editor / 03-06-2023 12:12:16am
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம்.

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வைகாசி விசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி மலையடிவாரத்தில் உள்ள நான்கு ரத வீதியில் நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பியபடி நான்கு ரத வீதியில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வைகாசி விசாகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

 

Tags :

Share via

More stories