by Staff /
27-06-2023
01:54:52pm
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 44), தொழிலாளி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அழகியமண்டபம் சென்றார். அங்கு வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். குழிக்கோடு அருகே வந்தபோது சாலையில் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவர் மீது அமல்ராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் காயமடைந்தனர். அவர்கள் சாலையில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அமல்ராஜை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இன்று அதிகாலை அமல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via