by Editor /
28-06-2023
09:50:59pm
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான தனியார் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. விதிகளுக்கு புறம்பாக கனிம வளங்களை சுரண்டி இந்த செங்கல் சூளைகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியினுடைய நிறுவனத் தலைவர் சீமான் தலைமையில் அதிக அளவில் கனிம வளங்களை குவித்து வைத்துள்ளதாக கூறப்பட்ட அந்த குவாரிக்கு சென்று பார்வையிட்டு வந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் சென்று அவர்கள் அங்கு பணியில் இருந்த தொழிலாளியை தாக்கியதாக கூறி சீமான் உள்ளிட்ட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அந்தப் நிறுவனத்திற்கு சொந்தமான செங்கல் சூளையில் உசிலம்பட்டி பகுதியைச் சார்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் வினோத்குமார் அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மகன் பிரபு ராஜன் காசிராஜன் மகன் சௌந்தரபாண்டி ஆகிய மூன்று நபர்கள் தாங்கள் பிரபல தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களின் நிருபர்கள் என்று கூறி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இந்த புகாரை திறந்து விரைந்து வந்த புளியங்குடி போலீசார் மூன்று நபர்களையும் பிடித்து விசாரணை செய்ததில் மூன்று நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்து உள்ளனர் இதன் தொடர்ச்சியாக மூன்று நபர்களையும் கைது செய்த புளியங்குடி போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
<br />
Tags :
Share via