அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்

by Editor / 19-07-2021 08:52:36pm
அதிமுக அவைத்தலைவர்  மதுசூதனன் கவலைக்கிடம்

 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மதுசூதனின் மனைவி ஜீவா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போதுகூட அதிமுக மூத்த தலைவரும் அவைத்தலைவருமான மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via