by Staff /
13-07-2023
03:22:18pm
ஆந்திரா அன்னமய்யா மாவட்டத்தில் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. விவசாயி ஆன இவர், தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். தற்போது நிலவும் தக்காளியின் விலை உயர்வால் 20 நாட்களில் 30 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளார். இவர் தனது தோட்டத்திலேயே தங்கியிருந்து தக்காளியை பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ராஜசேகர் ரெட்டி தனது தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜசேகர் ரெட்டியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Tags :
Share via