தமிழக அரசு வாங்கிய கடன் எதையும் தவறாக பயன்படுத்தவில்லை-அப்பாவு

மகளிர் உரிமைத் தொகையில் மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தவில்லை எனவும் மாறாக ஒன்றிய அரசுதான் தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக தமிழக அரசின் பேரவை தலைவர் அப்பாவு குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கட்டுமான தொழில் தற்போதைய சூழலில் எவ்வாறு உள்ளது, கட்டிடக்கலையும் தமிழர் பண்பாடும் உள்ளிட்டவைகள் குறித்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்த இரண்டு நாட்கள் நடக்கக்கூடிய பயிற்சி முகாமை தமிழக அரசின் பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறுகையில்,
மகளிர் உரிமைத் தொகையில் மத்திய அரசின் நிதியை தவறாக பயன்படுத்தவில்லை, மத்திய அரசுக்கு செலுத்தக்கூடிய ஜிஎஸ்டி வரி உத்திர பிரதேசத்திற்கு மட்டும் அதிக அளவில் திரும்ப வருகிறது, அதேசசமயம் தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாரபட்சத்துடன் பார்க்கிறது.
அதேசமயம் தமிழக அரசு வாங்கிய கடனை எதையும் தவறாக பயன்படுத்தவில்லை, இதுவரை நான்கரை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அதிக கடன் வாங்குவதாக குற்றம் சாட்டுபவர்கள் எந்தவித திட்டங்களுக்கு தேவையின்றி செலவிடப்பட்டுள்ளதாக உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

Tags :