உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வல்ல -அண்ணாமலை
சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் மாணவன் ஜெகதீஸ்வரன் (19 வயது) நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மாணவனின் தந்தை செல்வசேகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, கல்லூரித் தேர்வுகள், அரசுப் பணித் தேர்வுகள், குடிமையியல் பணித் தேர்வுகள் என தங்கள் கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையில் தேர்வுகள் பள்ளி கல்லூரி பருவத்துடன் முடிவடைவதில்லை என்பதே எதார்த்தமான உண்மை. குழந்தைகளை, கல்வி, மதிப்பெண்கள் வைத்து ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Tags :