ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப்பணிக்கு மாற்றம்

by Staff / 01-09-2023 12:25:21pm
ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப்பணிக்கு மாற்றம்

தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் ஆகியோர் மத்திய அரசுப்பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளராக கிருஷ்ணனும், தொலைத் தொடர்புத்துறை செயலாளராக நீரஜ் மிட்டலும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தும் பொறுப்பில் இருந்த கிருஷ்ணனும், நீரஜ் மிட்டலும் மாற்றப்பட்டுள்ளதால், இந்த பொறுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும்.

 

Tags :

Share via