திருப்பதியில் 8 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

by Editor / 30-09-2023 10:08:36am
திருப்பதியில் 8 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

திருப்பதி: புரட்டாசி மாதம் என்பதாலும்,பள்ளி விடுமுறைக்காலம் என்பதாலும்  ஏழுமலையானை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்துக்கொண்டுள்ளனர்.புரட்டாசி சனிக்கிழமை என்பதால் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்.8 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. அறைகள் கிடைக்காத பக்தர்கள் சொந்த வாகனங்கள், திறந்தவெளி ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வார விடுமுறை தினங்கள் என்பதாலும்,புரட்டாசி மாசம் என்பதாலும்  திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.
 

 

Tags : திருப்பதியில் 8 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

Share via