பட்டபகலில் அரசு மதுபான கடை முன்பு பார் ஊழியர் அரிவாளால் வெட்டி கொலை...

by Staff / 11-10-2023 02:04:22pm
பட்டபகலில் அரசு மதுபான கடை முன்பு பார் ஊழியர் அரிவாளால் வெட்டி கொலை...

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவரது மகன் காந்தி ராஜன் (33). இவருக்கு  திருமணம் முடிந்து மனைவி மற்றும்  இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  

மேலும் காந்தி ராஜன் சாத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு மதுபானக் கடையில் உள்ள தனியார் பாரில் ஊழியராக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் காந்தி ராஜன் வழக்கம் போல்  மதுபான பாரில் வேலை செய்து கொண்டு இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென காந்தி ராஜனை அரிவாளால் வெட்டி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சக ஊழியர்கள் சாத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காந்தி ராஜனை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் மருத்துவமனையில் அனுமதித்த காந்தி ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும் அரசு மதுபானக்கடையில் இருந்த சிசிடி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பார் ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

மேலும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடை பெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில் கோவில்பட்டி செல்லும் வழியில் தோட்டிலோவன்பட்டியில் உள்ள போலீஸ் செக்போஸ்ட்டில் காந்தி ராஜனை அரிவாலால் வெட்டியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். 

மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காந்தி ராஜனை முன்பகை காரணமாக வெட்டி கொலை செய்ததாக   நத்தத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  கிருஷ்ண பிரபு (27) மற்றும்
மகாலிங்க சுந்தரமூர்த்தி (23) ஆகியயோர் என்பது முதல் கட்ட  விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் சோமசுந்தரம் மற்றும் சூரிய மூர்த்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்

மேலும் பட்டப்பகலில் பொது மக்கள் அதிகம் கூடும்  பேருந்து நிலையம் அருகில் இந்த கொலை சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்னும் உடலை  வாங்கவில்லை கொலை செய்யப்பட்ட ஒரு வீட்டில் இருந்து கோரிக்கை ஒன்றை வைக்கிறார்கள் அரசு வேலை ரூபாய் 10 லட்சம் அரசு வீடு கேட்டு நேற்று இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்று சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்த உள்ளனர். இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சியரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தான் உடலை வாங்குவதாக தெரிய வருகிறது.

 

Tags :

Share via