இளம் பெண்ணின் கால், கை வெட்டி கொடூரம்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண்ணின் கால், கைகளை வெட்டிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலியின் சிபிகஞ்ச் பகுதியில் சமீபத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. இளம் பெண் ஒருவர் டியூஷன் சென்று வரும்போது சில இளைஞர்கள் அவளைத் துன்புறுத்தினர். மேலும், அப்பெண்ணை ரயில் முன் தள்ளினர். இந்த விபத்தில் அப்பெண் இரண்டு கால்களையும் ஒரு கையையும் இழந்தார். மேலும், உடலில் பல எலும்புகள் உடைந்தன. இந்த சம்பவத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
Tags :