2 மகள்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை
கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் பள்ளியில் நடந்த போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை சகோதரிகளான மாணவிகள் இருவர் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். தங்களை கடந்த11 மாதங்களாக தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக மாணவிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து, தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர். பள்ளியில் நடந்த போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
Tags :