சமாதான முயற்சியில் பலியான தம்பதி

by Staff / 14-10-2023 01:08:49pm
சமாதான முயற்சியில் பலியான தம்பதி

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தற்கொலை செய்ய முயன்ற மனைவியை சமாதான முயற்சியில் ஈடுபட்ட போது தம்பதி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உயிரை மாய்த்துக்கொள்ள ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த மனைவியை கட்டியணைத்து அவரை சமாதானப்படுத்த கணவன் முயன்றுள்ளார். அந்த வேளையில் வந்த ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கணவர் கோவிந்தின் குடிப்பழக்கத்தால் குஷ்பு இம்முடிவை எடுக்கச் சென்றுள்ளார். மனைவியை சமாதானப்படுத்த வரும்போதும் மதுபோதையில் இருந்துள்ளார்.

 

Tags :

Share via

More stories