இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. சிக்கிய தீவிரவாதி

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2 மணிக்கு நடைபெறும் இந்த போட்டிக்காக இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறவிருந்த அகமதாபாத்தில் பயங்கர தீவிரவாத சதியை போலீசார் தடுத்துள்ளனர். அதன்படி, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அமிர்தசரஸில் பயங்கரவாதிகள் கைது செய்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் நாட்டையே பயமுறுத்த சதி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Tags :