அப்துல்கலாம் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 92வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி, ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
Tags :