தொடர் விடுமுறை - 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

by Staff / 17-10-2023 11:14:57am
தொடர் விடுமுறை - 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அக். 21-24ம் தேதி வரை திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும். அக். 20-22ம் தேதி வரை திருச்சியில் இருந்து கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அக். 24, 25 தேதி சென்னையில் இருந்து 300, மற்ற வழித்தடங்களில் இருந்து 200 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via