சித்தா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசிடம் கோரிக்கை; அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திருச்சியில் சித்தா எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.இதுதொடர்பாக சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு பல்வேறுசிறப்பான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படுகிறது. மதுரையில் பெரியஅளவிலான ஓமியோபதி கல்லூரிகட்டும் பணியும் தொடங்கப்படஉள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை போன்று சித்தா எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கைமத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ளது. அப்படி கிடைக்கும்பட்சத்தில் அந்த மருத்துவமனை திருச்சியில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்காக 25 ஏக்கர் பரப்பளவில் மாதவரம் பால் பண்ணையில்இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடக்கவிழா நடைபெறும்.கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை திறக்க முதல்வர், மத்திய அமைச்சரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலேயே முதல் முதியோருக்கான மருத்துவமனை இங்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags :