காமராசர் பல்கலை., நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் - அன்புமணி

by Staff / 26-11-2023 02:10:58pm
காமராசர் பல்கலை., நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் - அன்புமணி

காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அறிக்கையில், காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் என சுமார் 1000 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க மாதம் ரூ.10.50 கோடி தேவைப்படும் நிலையில், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்ய முடியாதது தான் இந்த நிலைக்கு காரணம். அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo