நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்டஎட்டு தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு

by Staff / 03-12-2023 04:04:28pm
நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்டஎட்டு தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு

 தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 இடங்களில், காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளிலும் . பா.ஜ.க 9 இடங்களிலும், ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில்,, பா.ஜ.க கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கிறது.

 

Tags :

Share via