பெட்ரோல் குண்டு வீச்சு: ஓபிஎஸ் கண்டனம்.

by Staff / 26-10-2023 04:42:23pm
பெட்ரோல் குண்டு வீச்சு: ஓபிஎஸ் கண்டனம்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகை மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு துணிச்சல் ரவுடிகளுக்கு வந்திருக்கிறதென்றால், இதற்குக் காரணம் வன்முறையாளர்கள்மீது மென்மையானப் போக்கைக் தி. மு. க. அரசு கடைபிடிப்பதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. இனி வருங்காலங்களிலாவது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆளுநர் உட்பட அனைவரின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories