விஜயகாந்த் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன் - செல்லூர் ராஜு

by Staff / 06-12-2023 11:40:44am
விஜயகாந்த் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன் - செல்லூர் ராஜு

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டுமென மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக் கொள்கிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், சினிமாவில் எம்ஜிஆரை போன்றவர் விஜயகாந்த். அவர் தான் உண்ணும் உணவைத்தான் சக ஊழியர்களுக்கும் வழங்குவார். சினிமாவிலும், அரசியலிலும் கரைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். அவர் உடல்நலம் பெற்று விரைந்து வீடு திரும்ப வேண்டும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via