சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.

by Editor / 29-12-2023 09:49:28am
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்படுவதால் வாகன ஒட்டிகள் தீவுத்திடல் வழியே செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து விஜபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம் வழியாக தீவுத்திடல் மைதானத்தின் இடது நுழைவு வாயில் வழியாக செல்லலாம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மேக்சி கேப்கள்) அண்ணா சிலை வரை அனுமதிக்கப்படும். பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படும்.

 

Tags : சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.

Share via

More stories