பேருந்தில் பிச்சையெடுக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்

by Staff / 07-01-2024 03:11:10pm
பேருந்தில் பிச்சையெடுக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்

தெலங்கானா மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி அரசு, பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக  ஆட்டோ, டாக்சி  ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் . ஆட்டோ ஓட்டுநர்கள் அரசுப் பேருந்துகளுக்குள் ஏறி பெண் பயணிகளிடம் பாத்திரங்கள் ஏந்தியும் கை நீட்டியும் பிச்சை கேட்டு போராட்டம் செய்ததோடு. ஒரு நாளைக்கு.100ரூபாய் கூட வருமானம் இல்லையென  வேதனையுடன் புலம்பி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories