நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை.....சிறப்பு நீதிமன்றம்

by Staff / 19-02-2024 02:41:21pm
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை.....சிறப்பு நீதிமன்றம்

நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான புகாரில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கில், எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மனுவை ஏற்று தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via