சுயேட்சை வேட்பாளர்க்கு அடிச்ச யோகம்.கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு
ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ பன்னீர்செல்வம் என்பவருக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. உசிலம்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உட்பட ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட 5 பேர் ராமநாதபுரத்தில் களம் காண்கின்றனர். ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை நாம் தமிழர் கட்சி கேட்டு வந்த நிலையில், தற்போது சுயேட்சை ஒருவருக்கு அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags : சுயேட்சை வேட்பாளர்க்கு அடிச்ச யோகம்.கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு