ஆம்புலன்சில் தீ பிடித்து நோயாளி உயிரிழப்பு

by Staff / 14-05-2024 02:36:56pm
ஆம்புலன்சில் தீ பிடித்து நோயாளி உயிரிழப்பு

கேரளாவின் கோழிக்கோடு நகரில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். அதிகாலை 3.50 மணியளவில் ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது. உயிரிழந்தவர் நாதாபுரத்தைச் சேர்ந்த 57 வயதுடைய சுலோச்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் ஆம்புலன்சில் இருந்த 4 பேர் காயப்படைந்துள்ளனர். மலபார் மருத்துவக் கல்லூரியில் இருந்து அறுவை சிகிச்சைக்காக நோயாளியை மிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கல்லுத்தான்கடவு அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo