கொல்கத்தா அணிக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து

by Staff / 27-05-2024 11:49:57am
கொல்கத்தா அணிக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கொல்கத்தா அணியில் வெற்றி பெங்காலில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சாதனை படைத்த வீரர்கள், உரிமையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துகள். வருகிற ஆண்டுகளிலும் இதே போல் வெற்றியைக் குவிக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கொல்கத்தா அணியில் வெற்றி பெங்காலில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சாதனை படைத்த வீரர்கள், உரிமையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துகள். வருகிற ஆண்டுகளிலும் இதே போல் வெற்றியைக் குவிக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

 

Tags :

Share via