தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்பு..அதிமுக,பாஜகவை பின்னுக்கு தள்ளும் திமுக...?

by Editor / 01-06-2024 09:45:29pm
தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்பு..அதிமுக,பாஜகவை பின்னுக்கு தள்ளும் திமுக...?

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் TV9 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அதிமுக கூட்டணி ஒரு இடங்களை கூட வெல்லாது என தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் 4 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. மேலும் பிற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கூறப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சியாக இருக்கும் தந்தி டிவி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, திமுக கூட்டணி 33-40 இடங்களையும், அதிமுக கூட்டணி 0-2 இடங்களையும், பாஜக கூட்டணி 0-5 இடங்களையும் கைபற்றும் என கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் இழுபறி இருக்கும் நிலையிலும், அந்த இடங்களில் திமுக வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Tags : தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்பு..அதிமுக,பாஜகவை பின்னுக்கு தள்ளும் திமுக...?

Share via