நேபாளத்தில் 40 இந்தியர்களுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து

by Staff / 23-08-2024 01:02:05pm
நேபாளத்தில் 40 இந்தியர்களுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து

நேபாளத்தில் உள்ள தனாஹுன் என்ற மாவட்டத்தில் இன்று  பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களைப் பார்வையிடுவதற்காக 40 இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo