பெண்கள் தங்கு விடுதி தீ விபத்து - 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் கட்டிடங்களுக்கு சீல் வைப்பு.
மதுரை பெண்கள் தங்கு விடுதி தீ விபத்து - 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பெண்கள் விடுதி அமைந்துள்ள கட்டிடத்தை இடிப்பதற்காக மாநகராட்சி சார்பில் கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுகலாம் என்ற பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் கீழ் தளங்களில் கடைகள் இயங்கிவரும் நிலையில் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகளை தொடங்கும் முன் மாற்று ஏற்பாடு செய்வதற்கான தங்களுக்கு உரிய கால அவகாசம் தர வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் பெண்கள் விடுதி மருத்துவமனை மெடிக்கல் மற்றும் விடுதி அமைந்துள்ள கட்டிடங்களில் கீழ் அமைந்துள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது.
Tags : பெண்கள் தங்கு விடுதி தீ விபத்து - 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் கட்டிடங்களுக்கு சீல் வைப்பு.