மூன்று சிறுவர்களின் முகங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் மீட்பு பதற்றம்.

by Editor / 15-01-2025 08:35:37pm
மூன்று சிறுவர்களின் முகங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் மீட்பு பதற்றம்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் மூன்று பள்ளி மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்று இளைஞர்களின் முகங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட விழுதவாடி கிராமம் அருகே ஏரிக்கரை தாங்கலில் மூன்று நபர்கள் முகத்தை எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மிதப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், உத்திரமேரூர் பொறுப்பு காவல் ஆய்வாளர் சங்கர் சுரேஷ், உத்திரமேரூர் காவல் உதவி ஆய்வாளர் மாரி செல்வம் மற்றும் உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சடலத்தை மீட்டனர்.

 

Tags : மூன்று சிறுவர்களின் முகங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் மீட்பு பதற்றம்.

Share via