கணவர் கண் முன்னே துடிதுடித்து மனைவி பலி

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பைக்கில் குழந்தையுடன் சென்ற தம்பதி மீது லாரி மோதிய விபத்தில் மனைவி உயிரிழந்தார். மாயா பிரகாஷ் மௌரியா என்பவர் தனது மனைவி கமலா தேவி மற்றும் 5 வயது மகனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Tags :