பொதுக்கூட்டங்களுக்கு கட்டணம்- கோர்ட் அதிரடி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இனி வரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டணத்தை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த கோரியும், பஞ்சமி நிலம் மீட்க கோரியும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.இந்தப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி திருப்போரூர் காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் கந்தசாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா மற்றும் முகூர்த்த நாள் எனவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Tags :