நெல்லை :அதிரடி காட்டிய ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடியாக பஸ் பயண அட்டை.

நெல்லை மாவட்டம். பணகுடி பாம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் மகள் செல்வி இந்திரா (வயது 23). மாற்றுத்திறனாளி.
இவர் தெற்கு கள்ளி குளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பொருளாதாரம் இளநிலை படித்து முடித்து, அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக வீட்டில் இருந்தே பயின்று வந்தார்.
இந்நிலையி ல் மாற்றுத்திறனாளி மாணவி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உதவி வேண்டுமென்றும். மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை போன்ற நலத்திட்ட உதவிகள் கேட்டு நெல்லைஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆட்சியர் சுகுமார் அந்த மாணவி யின் மனுவினை பரிசீலித்து மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டையும், பஸ் பயண அட்டையும் உடனே வழங்கினார்.
இதுகுறித்து இந்திரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எனது தாய் கூலி தொழில் செய்து 'மிக கடினமான சூழ்நிலையிலும், என்னை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். மாற்றுத்திறனாளி மாணவிகள் வாழ்க்கையில் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்ற எண்ணத்திலும், அரசு பணியில் சேர்ந்து பிற மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்று நினைத்தும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு. வீட்டில் இருந்தே பயின்று வந்தேன். இருந்தபோதிலும், எனது தாயாரின் வருமானத்தை கொண்டு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்குவதற்கும், பிற இடங்களுக்கு சென்று பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கும் மிகவும் சிரமமாக இருந்தது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் உடனடியாக இந்த உதவியை செய்துள்ளார். மேலும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் மற்றும் பல்வேறு புத்தகங்களும் வழங்கி, போட்டித் தேர்வுகளுக்கு வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்வதாக ஆட்சியர் கூறியுள்ளார். அரசுக்கு எனது நன்றி.என அவர் தெரிவித்தார்.
Tags : நெல்லை :அதிரடி காட்டிய ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடியாக பஸ் பயண அட்டை.