ரயில் தண்டவளத்தில் கல் வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து காலை 6:15 மணிக்கு இன்று ஈரோடு நோக்கி பயணிகள் புறப்பட்டு சென்றது இந்த ரயில் சேரமகாதேவி அருகே செல்லும்பொழுது கூனியூர் பகுதியில் தண்டவளத்தின் பரும் கல் இருப்பது தெரிய வந்தது தொடர்ந்து எதிர்பாராத விதமாக அந்த கல் ரயிலில் முன் இருந்த தடுப்பு மூலமாக கல் அகற்றப்பட்டது இது குறித்துரயில் எஞ்சின் டிரைவர் தென்காசி இருப்பு பாதை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ரயிலை ஓட்டிச் சென்றார் இதன் தொடர்ச்சியாக தென்காசி இருப்புப் பாதை காவல்துறை ஆய்வாளர் பிரியா மோகன் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் ரயில் தண்டவாளத்தில் பெரும் கல்லை வைத்தவர் கூனியூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பதும் அவர் வீட்டு பின்பகுதியில் தண்டவாளம் இருப்பதும் தெரிய வந்ததைத்தொடர்ந்து அவரை கைது செய்து தென்காசி இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் இரவு 9 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags : ரயில் தண்டவளத்தில் கல் வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.