மாநிலங்களுக்கு 50% வரிப்பகிர்வு வழங்குக - மு.க.ஸ்டாலின்

by Editor / 24-05-2025 03:58:02pm
மாநிலங்களுக்கு 50% வரிப்பகிர்வு வழங்குக - மு.க.ஸ்டாலின்

ஒன்றிய அரசின் வரி வருவாயில் 50% வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், "மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41% வரிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை. தற்போது 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது. இதனால், ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிட வேண்டிய தேவை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via