பயங்கர சாலை விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். கான்கர் மாவட்டத்தில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் உள்ள தடுப்பு மீது மோதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், காரில் இருந்த 4 பேர் உயிருடன் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Tags :