இளைஞர்களுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயன்ற மனைவி

by Editor / 28-07-2025 04:09:47pm
இளைஞர்களுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயன்ற மனைவி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே, இளைஞர்களுடன் சேர்ந்து கணவரை, மனைவி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குத்புல்லாபூரைச் சேர்ந்த ராம்தாஸ் - ஜோதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இளைஞர்களுடன் சேர்ந்து ராம்தாஸை கொல்ல திட்டம்தீட்டிய ஜோதி, போதை மருந்து கொடுத்து, பீர் பாட்டில்களால் தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த ராம்தாஸ், இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து அவர்கள் சென்றுள்ளனர். பின்னர், ரம்தாஸ் தனது தம்பி வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.

 

Tags :

Share via