அமெரிக்க போலீசாரால் தெலங்கானா இளைஞர் சுட்டுக் கொலை
அமெரிக்க போலீசாரால், தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயது முகமது நிஜாமுதீன் என்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் தனது அறை நண்பருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில், அமெரிக்க போலீஸ் சுட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளைஞரின் உடலை இந்தியா கொண்டு வர, குடும்பத்தினர் வெளியுறவுத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags :


















