தெலுங்கானா மாநில மலராக தங்கேடு பூ அறிவிப்பு.

தெலுங்கானாவின் மாநில மலராக தங்கேடு பூ (Tangedu Puvvu) அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மலர் “சென்னல் மரம்” எனப்படும் Senna auriculata தாவரத்தில் மலர்கிறது. மஞ்சள் நிறத்தில் மலரும் இந்த மலர், பொன்நிறத்தை குறிக்கும் அடையாளமாக கருதப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி மற்றும் பிற முக்கிய விழாக்களில் அலங்காரத்திற்குப் பயன்படுகிறது. தங்கேடு பூ, தெலுங்கானா மக்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்குகிறது. மேலும், இது மாநில மக்கள் மத்தியில் பெருமை மற்றும் அடையாளமாக கருதப்படுகிறது.(தமிழ்நாட்டில் ஆவாரம்பூ என்றழைக்கபப்டும் இந்தமலர்கள் சுகருக்கு அருமருந்தாக கருத்தப்ப்டுகிறது.மேலும் அம்மை நோய் ஏற்பட்டவர்களுக்கு குளியலுக்கு ஆவாரம்பூ மருந்தாக பயன்படுகிறது).
Tags : தெலுங்கானா மாநில மலராக தங்கேடு பூ அறிவிப்பு.