நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை.

சென்னை போரூரில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்ய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட வழக்கில், கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த நிலையில், புழல் சிறையில் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டு நடந்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை