கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது-ஐரோப்பிய நாடுகள்- நேட்டோ தலைவர்கள் கருத்து
வெனிசுல அதிபரையும் அவரது மனைவியும் கைது செய்ததை அடுத்து தமது ஆதிக்கத்தை கிரீன்லாந்து மீதும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விரிவுபடுத்தி உள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள டிரம்ப் ஐரோப்பிய நாடுகளும் நேட்டோ தலைவர்களும் கடுமையாக கண்டித்துள்ளதோடு கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஈராலில் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியால் அரசாங்க எதிர்ப்பு போராட்டம் தீவிரப்பட்டுள்ளது. பெரும்பாலான மாகாணங்களில் பாதுகாப்பு படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுவிசா்லாந்தின் கிராண்ட்ஸ் மண்டனா கைப்பாரில் நடந்த தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பாரில் பாதுகாப்பு ஆய்வு கடந்த ஐந்து ஆண்டுகளில் நடத்தப்படவில்லை என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்திய போதிலும் இரு நாடுகளான உறவுகளை மீண்டும் நிலை நிறுத்துவதற்காக அதிபர் லீ ஜே மியு ங்நான்கு நாள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு சென்று உள்ளார்.
வங்கதேசத்தில் தேர்தலுக்கு முன்னதாக சிறுபான்மையினர் மீது குறைந்தது 51 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. மேலும் வகுப்புவாத வன்முறை தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்கா சூடானில் எல் _ ஓபெய்ட் நகரில் நடந்த ட்ரோன் தாக்குதலில் எட்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.
எலன் மஸ்க் எக்ஸ் ஏ ஐ தரவு மையத்தை விரிவு படுத்துவதில் 20 பில்லியன் டாலரை திரட்டி உள்ள நிலையில் கிராக் ஏ ஐ அதிக கோள்களை உருவாக்கியதன் காரணமாக சர்வதேச நிலையில் அதற்கு பெரிய விமர்சனங்கள் தோன்றியுள்ளன.
Tags :













.png)





