மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டு செல்கிறார்கள்.

by Admin / 23-04-2026 11:15:41am
மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டு செல்கிறார்கள்.

தமிழக முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் வேகமாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இருந்த தேர்தல்களை விட இளைய தலைமுறை மட்டுமின்றி பெண்கள் மட்டுமின்றி இளைஞர்களும் அதிக ஆர்வத்தோடு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டு செல்கிறார்கள். திரைத்துறை ,அரசியல்,  துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.. ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு வாக்காளர்களுக்கு ஏற்பட்டதிற்குள்ள சமூக தாக்கங்களும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உணரச் செய்து தேர்தல் களத்தில் விறுவிறுப்பாக்கியுள்ளது. இது பொத்தாம் பொதுவாக அவர் வந்ததனால் இவர் வந்ததனால் என்று சொல்வதை விட சமூக ஊடகங்களின் பங்களிப்பும் எல்லா விஷயங்களையும் கைக்குள்ளே கொண்டு சேர்க்கும் நவீன தொழில்நுட்பம் மிகப்பெரிய ஒரு சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு செல்லிடை பேசும் ஒரு ஊடகமாக இன்றைக்கு அவரவர் உறவினர்கள் நண்பர்கள் என்று தகவல்களை பரிமாறிக் கொள்ளக்கூடிய செய்திக்களங்களாக மாறிப் போய்விட்டதனால் வாக்களிப்பது தங்களுடைய உரிமை என்கிற உணர்வு வெளிப்பாடாகவே இன்றைய தேர்தல் களம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo