நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது தவெக அரசு

by Editor / 13-05-2026 11:53:50am
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது தவெக அரசு

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றுள்ளது. தவெகவின் 106 எம்எல்ஏக்கள், காங்கிரஸின் 5, இடதுசாரிகளின் 4, விசிகவின் 2, ஐயூஎம்எல்-ன் 2, சுயேட்சை 1, அதிமுக வேலுமணி தரப்பின் 24 உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில் அரசுக்கு 144 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளதால் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 

 

Tags :

Share via
Logo