மது குடிக்க வைத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினத்தில், பி.டெக் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவியை ஏமாற்றி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளார் சக மாணவரான உதய். பின்னர், மாணவிக்கு போதை தலைக்கேறியதைப் பயன்படுத்தி, அவரை தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் உதயைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
Tags :



















